“ஒரே சரக்கு வாடை அடிக்குது” மருத்துவமனையில் மதுபோதை.. சிகிச்சைக்கு வந்த ஆணையரின் மனைவி… தலைதெறிக்க ஓடிய மருத்துவர்… வெளியான அதிர்ச்சி பின்னணி..!!

Spread the love

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில், பாட்னா மண்டல ஆணையரின் மனைவிக்கு சிகிச்சை அளிக்கச் சென்ற அரசு மருத்துவர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆணையரின் மனைவி தனது தாயுடன் முண்டேஸ்வரி கோயிலுக்குச் சென்று திரும்பியபோது, மலைப்பாதையில் அவர் காலில் முள் குத்தியுள்ளது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக சதர் மருத்துவமனையின் செயல் துணை கண்காணிப்பாளர் டாக்டர் அசித் ரஞ்சன் தலைமையிலான மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டது. சிகிச்சையின் போது அந்த மருத்துவரின் பேச்சு மற்றும் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அவர் மது அருந்தியிருப்பதாக ஆணையரின் மனைவி மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் (DM) உத்தரவின் பேரில், சிவில் சர்ஜன் அலுவலகத்தில் வைத்து மருத்துவருக்கு மதுப் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட டாக்டர் அசித் ரஞ்சன், சிறிது நேரம் அங்கு காத்திருந்த நிலையில், திடீரென ஏதோ ஒரு காரணத்தைக் கூறிவிட்டு தனது காரில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனால் அவர் மீதான சந்தேகம் வலுத்துள்ளது. மேலும், இந்த மருத்துவர் ஏற்கனவே பணியின் போது மது அருந்திய விவகாரத்தில் காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்ட சிவில் சர்ஜன், டாக்டர் அசித் ரஞ்சனிடம் இது குறித்து எழுத்துப்பூர்வமான விளக்கத்தைக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மருத்துவர் அளிக்கும் விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால், சுகாதாரத் துறையின் விதிகளின்படி அவர் மீது கடும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், ரத்த மாதிரி எடுக்கக் குழுவினர் வராததாலேயே தான் அங்கிருந்து சென்றதாகவும் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

10 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

10 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

10 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

11 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

11 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

11 மணத்தியாலங்கள் ago