“அடேங்கப்பா, கதை இப்படித்தான் போகப்போகுதா?…” முடிவுக்கு வந்த நீண்ட நாள் காத்திருப்பு… ‘ஹார்ட் பீட்’ சீசன் 3 புரோமோ அவுட்… கசிந்தது முக்கிய கதைக்களம்…!

By Visaka on ஆடி 6, 2026

Spread the love

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற மருத்துவத் தொடர் ‘ஹார்ட் பீட்’. தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில், டெலி ஃபேக்ட்ரி தயாரிப்பில் உருவான இந்த வெப் சீரிஸ், ஏற்கனவே இரண்டு வெற்றிகரமான சீசன்களைக் கடந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 100 எபிசோடுகளுடன் இதன் இரண்டாவது சீசன் நிறைவடைந்த நிலையில், அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ‘ஹார்ட் பீட்’ சீசன் 3-க்கான அதிகாரப்பூர்வ புரோமோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புரோமோ வெளியானதைத் தொடர்ந்து, சீசன் 3-ன் கதைக்களம் எப்படி நகரும் என்பது குறித்த சுவாரசியமான தகவல்களும் கசிந்துள்ளன. அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு உள்ளிட்டோரின் எதார்த்தமான நடிப்பில், மருத்துவமனையில் நடக்கும் சவால்கள், காதல் மற்றும் எமோஷனல் திருப்பங்களுடன் முந்தைய சீசன்கள் நகர்ந்த நிலையில், புதிய சீசனில் இன்னும் விறுவிறுப்பான மருத்துவப் போராட்டங்களும், புதிய கதாபாத்திரங்களின் வருகையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா படங்களுக்கு இணையாக ஓடிடி தொடர்களுக்கு மவுசு கூடிவரும் வேளையில், இந்த சீசன் 3-ம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் எனத் தெரிகிறது.