மகாராஷ்டிராவில் ஊசி போடுவதற்குப் பயந்து ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 9 வயது சிறுமி, நாய் கடித்த ஆறு மாதங்களுக்குப் பிறகு பரிதாபமாக உயிரிழந்தார். நாய் கடித்த ஆரம்பக்கட்டத்தில் சிறுமிக்கு எந்த பாதிப்பும் தெரியவில்லை என்றாலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. முதலில் உணவை உட்கொள்வதை நிறுத்திய சிறுமிக்கு, பின்னர் கண்கள் மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு நிலைமை மோசமானது.
மேலும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும், ரேபிஸ் வைரஸ் தீவிரமாகப் பரவியதால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். விலங்குகள் கடித்தால் ஏற்படும் பாதிப்புகளைப் அலட்சியப்படுத்தக் கூடாது என்பதையும், தடுப்பூசிகளின் அவசியத்தையும் இந்தச் சம்பவம் மீண்டும் வலியுறுத்துகிறது.
இதனால் ஊசி மீதான பயம் ஒரு குழந்தையின் உயிரையே பறித்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்திலேயே முறையான மருத்துவ சிகிச்சை மற்றும் தடுப்பூசி எடுத்திருந்தால் இந்த உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும் என்று மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
