சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு சிங்கம் தனது உயிரைப் பணயம் வைத்து ஒரு பருந்தை (Eagle), உலகின் மிகவும் ஆபத்தான பாம்புகளில் ஒன்றான ‘பிளாக் மாம்பா’விடமிருந்து (Black Mamba) காப்பாற்றும் காட்சிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன. தென்னாப்பிரிக்காவின் ரீட்ஸ்ப்ரூட் (Rietspruit) விளையாட்டு காப்பகத்தில் இந்த அரிய நிகழ்வு படமாக்கப்பட்டுள்ளது.
Lions ‘rescue’ an eagle from a black mamba snake
— Science girl (@sciencegirl) March 7, 2026
வீடியோவில், ஒரு பாம்புப்பருந்து (Snake Eagle) கறுப்பு மாம்பாவைப் பிடிக்க முயன்றபோது, அந்தப் பாம்பு பருந்தைச் சுற்றிக் கொண்டு அதை நெரிக்கத் தொடங்கியது. பருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடிக் கொண்டிருந்த சமயம், அங்கிருந்த சிங்கங்கள் அந்த இடத்திற்கு வந்தன. பொதுவாகச் சிங்கங்கள் இத்தகைய விஷப் பாம்புகளிடம் நெருங்காது என்றாலும், பருந்தின் பரிதாப நிலையைக் கண்ட ஒரு பெண் சிங்கம் பாம்பைத் தட்டி விட்டுப் பருந்தை விடுவிக்க முயன்றது.
சிங்கத்தின் ஆக்ரோஷமான குறுக்கீட்டால் மிரண்டு போன பிளாக் மாம்பா, பருந்தின் மீதான பிடியைத் தளர்த்தி அங்கிருந்து தப்ப முயன்றது. இந்தச் இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்ட பருந்து, மீண்டும் உயிர் பெற்று அங்கிருந்து பறந்து தப்பியது. காட்டில் ஒரு வேட்டையாடி மற்றொரு வேட்டையாடியைக் காப்பாற்றிய இந்தச் சம்பவம் “இயற்கையின் விந்தை” என்று வர்ணிக்கப்பட்டு வருகிறது.
