அதிமுகவின் தூண்களாக இருந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக செயல்பட தொடங்கியது. அவர் தலைமை பொறுப்பை ஏற்றதிலிருந்தே அந்த கட்சி தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகின்றது. இதனை சரிசெய்ய இபிஎஸ் எவ்வளவு முயற்சித்தும் பழைய நிலைக்கு திரும்ப முடியவில்லை. இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் இபிஎஸ் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். மற்ற கட்சிகளை விட அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் இதில் வெற்றி பெற தேசிய கட்சியான பாஜகவுடன் ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது.
பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்தது தமிழக சட்டமன்ற தேர்தலை டார்கெட் செய்துள்ளது. தமிழகத்தில் அதிமுக வெற்றி பெற்றால் இங்கு அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் கூறி வந்தனர். தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் பாஜகவுக்கு அதிமுக வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமைத்து தங்களுடைய வலுவான தடத்தை பதிக்கலாம் என்று பாஜக நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் வெற்றி பெறும் வரை தான் கூட்டணி, அதன் பிறகு ஒற்றை தலைமை என்ற முறைதான் நீடித்து வருகிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இருந்தாலும் அதன் உள் வட்டாரங்களில் சில முரண்பாடுகள் நிலவி வருகின்றன.
இதனிடையே அதனை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக கூட்டணி ஆட்சி தான் அமையும் என்ற நோக்கத்திலும் பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் பிரசாந்த் ஒரு கருத்தை கூறியுள்ளார். NDA வெற்றி பெற்றால் தனி ஆட்சியா அல்லது கூட்டணி ஆட்சியா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று பதிலளித்துள்ளார். இவருடைய இந்த பதில் கூட்டணி ஆட்சி என்ற முடிவிலோ இருந்து பாஜக பின்வாங்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை என்ற இபிஎஸ் கூறிவரும் நிலையில் இந்த விவகாரம் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி இடையே சில முரண்பாடுகளை உண்டாக்கும் என தெரிகிறது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மனித உரிமை காக்கும் கட்சித் தலைவரும் நடிகருமான கார்த்திக், சசிகலா…
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளராகப் பார்க்கப்பட்ட அண்ணாமலை, தற்போது ஒரு தொகுதியில் கூட வேட்பாளராக…
கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தனது இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அரசை மிகக்…
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…