வாடகை கேட்ட ஓனருக்கு “ஷாக்” கொடுத்த வாடகைதாரர்…. 75 வயது பாட்டியை ரூமில் வைத்து பூட்டிய வழக்கறிஞர்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், வாடகை பாக்கியைக் கேட்ட கட்டிட உரிமையாளரை வாடகைதாரரே சிறைபிடித்த விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஓய்வு பெற்ற செவிலியரான 75 வயது சந்திரா என்பவருக்குச் சொந்தமான கட்டிடத்தில், வழக்கறிஞர் ராமச்சந்திரன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக அலுவலகம் நடத்தி வருகிறார்.

நீண்ட நாட்களாக வாடகை தராததால் கட்டிடத்தை காலி செய்யுமாறு சந்திரா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாகப் பேசச் சென்ற சந்திராவையும் அவரது மகனையும், வழக்கறிஞர் ராமச்சந்திரன் அறையிலேயே வைத்துப் பூட்டிவிட்டு வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பூட்டிய அறைக்குள் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு  சந்திரா மயங்கி விழுந்தார். தகவல் அறிந்து வந்த உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் அலுவலகக் கதவை உடைத்து அவர்களை மீட்டனர். தற்போது சந்திரா குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டத்தை மதிக்க வேண்டிய வழக்கறிஞரே, மூதாட்டி என்றும் பாராமல் வீட்டு உரிமையாளரைச் சிறைபிடித்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துக் குடியாத்தம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

8 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

8 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

8 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

8 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

8 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

8 மணத்தியாலங்கள் ago