தனது சகோதரர்கள் பிரேம்ஜி, வெங்கட் பிரபுவுடன் பாட்டு பாடி என்ஜாய் பண்ணும் மறைந்த பாடகி பவதாரிணி.. மனதை உருகச்செய்யும் வீடியோ..

By Begam

Updated on:

தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் இசைஞானி இளையராஜா. இவரின் மகளும் ,பின்னணிப் பாடகியுமான பவதாரிணி கடந்த வாரம் இலங்கையில் உயிரிழந்தார். கேன்சர் பாதிப்பு காரணமாக ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்த பவதாரிணியின் திடீர்  மறைவு ரசிகர்களையும், திரைபிரபலங்களையும்,  அவரது குடும்பத்தையும் கடுமையான  சோகத்தில் ஆழ்த்தியது.

   

இதனையடுத்து இலங்கையில் இருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட பவதாரிணியின் உடல், இளையராஜாவின் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  பவதாரிணியின் இறுதி நிகழ்வில் அவருக்கு தேசிய விருது வென்று கொடுத்த ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலை இளையராஜாவின் குடும்பத்தினர் பாடி அஞ்சலி செலுத்தினர்.

இளையராஜா, யுவன், வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கண்ணீர் மல்க பவதாரிணிக்கு விடை கொடுத்தனர். முன்னதாக சென்னையில் வைக்கப்பட்டிருந்த பவதாரிணியின் உடலுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by VB (@vasukibhaskar)

இந்நிலையில், பவதாரிணியின் தங்கை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி உடன் மகிழ்ச்சியோடு பாடிய வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ‘ எவ்ளோ அழகா பாடுறாங்க.. இவங்களுக்கா இப்படி ஒரு நிலமை..?’ என்ற மனவருத்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by VB (@vasukibhaskar)

author avatar