எங்க மொழி பேசு… இல்லனா மும்பையை விட்டு வெளியேறு… ரயிலில் பெண்களுக்குள் வெடித்த பயங்கர சண்டை… சர்ச்சையை கிளப்பிய வீடியோ..!!

By Soundarya on மார்கழி 22, 2025

Spread the love

மும்பை புறநகர் ரயிலில் இருக்கைக்காகத் தொடங்கிய சாதாரண வாக்குவாதம், திடீரென மொழிப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மராத்தி பேசத் தெரியாத ஒரு பெண்ணை ரயிலில் இருந்து “வெளியேறு” என்று மற்றொரு பெண் மிரட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை, மும்பை மத்திய வழித்தடத்தில் (Central Line) நெரிசல் மிகுந்த பெண்கள் பெட்டியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. சுமார் 6 முதல் 7 பெண்கள் ஒரு இருக்கைக்காகத் தங்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த சண்டையின் போது, ஒரு பெண் மற்றொரு பயணியிடம், “நீங்கள் எங்கள் மும்பையில் வசிக்க விரும்பினால் கண்டிப்பாக மராத்தி பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்; இல்லையென்றால் இங்கிருந்து வெளியேறுங்கள்” என மராத்தி மொழியில் ஆக்ரோஷமாகக் கூறினார். மும்பை ரயில்களில் இருக்கைக்காகச் சண்டையிடுவது வழக்கமான ஒன்று என்றாலும், இது மொழி தொடர்பான மோதலாக மாறியதால் அந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் பன்முகத்தன்மைக்கு மத்தியில் அவ்வப்போது தலைதூக்கும் இதுபோன்ற மொழிப் பிரச்சனைகள், ரயில் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.