பார்த்திபன் Vs திரிஷா… “உருட்டாதீங்க, வேலைய பாருங்க”.. திரிஷா சர்ச்சையில் ஊடகங்களை வெளுத்து வாங்கிய பாஜக பிரமுகர்…!!!

By Rajeshwari on பங்குனி 10, 2026

Spread the love

நடிகை திரிஷா மற்றும் நடிகர் பார்த்திபன் இடையிலான கருத்து மோதல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் தனது அதிரடியான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

மேலும் நயினார் நாகேந்திரன் திரிஷா குறித்துப் பேசியது தவறாகச் சித்தரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது பார்த்திபனின் மனைவியே தனது கணவரைக் காப்பாற்றுமாறு கோரிக்கை வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் எனச் சுட்டிக்காட்டினார். ஊடகங்கள் இதுபோன்ற தனிப்பட்ட விவகாரங்களை ஊதிப் பெரிதாக்குவதை விடுத்து, உருப்படியான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

   

இந்த விவகாரத்தில் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்துள்ள நிலையில், கே.பி. ராமலிங்கத்தின் இந்தப் பேச்சு பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. திரிஷாவுக்கு ஆதரவாகவும் பார்த்திபனின் கருத்துகளுக்கு எதிராகவும் கண்டனங்கள் எழுந்து வரும் சூழலில், அரசியல் ஆதாயத்திற்காக இத்தகைய சர்ச்சைகள் கிளப்பப்படுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

   

மேலும், வரவிருக்கும் ஆட்சி மாற்றத்திற்குத் தங்களது பலமான கூட்டணியே போதுமானது என்றும், தேவையில்லாத தனிநபர் விமர்சனங்களை ஊடகங்கள் முன்னிலைப்படுத்துவதை ஏற்க முடியாது என்றும் அவர் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.