மருத்துவமனையா அல்லது ஓய்வறையா?… நோயாளி வந்தாலும் தூக்கம் கலையாத ‘கும்பகர்ண’ மருந்தாளுநர்… இதுதான் அரசு சேவையா?… வைரலாகும் வீடியோ…!!!

By Rajeshwari on பங்குனி 17, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்ட அரசு மருத்துவமனையில், பணியில் இருக்க வேண்டிய மருந்தாளுநர் ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்க வேண்டிய நேரத்தில், எவ்வித கவலையுமின்றி அவர் குறட்டை விட்டுத் தூங்குவதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் மருந்தகத்திற்கு வரும் நோயாளிகள், மருந்துகளைப் பெறுவதற்குப் பதிலாக, “சாரின் தூக்கம் கலைந்துவிடக் கூடாது” என்ற அச்சத்தில் மெதுவாகத் திரும்பிச் செல்லும் அவலநிலை அங்கு ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை எளிய மக்கள் தங்களின் உடல்நலக் குறைவிற்காகக் காத்திருக்கும் வேளையில், பொறுப்பான பதவியில் இருப்பவர் இப்படிப் பொறுப்பற்று நடந்து கொள்வது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

   

“>

   

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருந்தாளுநர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமை தவறிக் கண்ணயரும் இதுபோன்ற ஊழியர்களால் அரசு மருத்துவமனைகளின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாவதாகச் சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.