“நான்தான் செய்தேன்…” தூத்துக்குடி மாணவி வழக்கில் கொலையாளி கொடுத்த பகீர் வாக்குமூலம்… பரபரப்பு பின்னணி…!!

By Devi Ramu on பங்குனி 20, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான தர்ம முனீஸ்வரன் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரிடம், நீதிபதி ப்ரீத்தா விசாரணை நடத்தினார். அப்போது, “நான்தான் அந்த மாணவியைச் சீரழித்துக் கொன்றேன்” என அவர் அளித்த வாக்குமூலம் அங்கிருந்தோரை உறைய வைத்தது.

இதையடுத்து, குற்றவாளிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்த நீதிபதி, ஏப்ரல் 2-ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். முன்னதாக, அவரை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தியதோடு, டிஎன்ஏ பரிசோதனையும் மேற்கொண்டனர். தற்போது பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு, கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.