மகளிர் உரிமைத்தொகை கட்…. யார் யாருக்கெல்லாம் இனி ரூ.1000 கிடைக்காது?… உங்களின் பெயர் லிஸ்ட்டில் இருக்கிறதா?…. தமிழக அரசு ஷாக் நியூஸ்….!

By Nanthini on புரட்டாதி 2, 2026

Spread the love

தமிழ்நாட்டில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ மூலம் பல லட்சம் பெண்கள் மாதம் ரூ.1,000 நிதியுதவி பெற்று வரும் நிலையில், கடந்த மூன்று மாதங்களாக ஆயிரக்கணக்கானோருக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்ற செய்தி பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்தபோது, பெரும்பாலான பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ‘e-KYC’ முறைப்படி அப்டேட் செய்யப்படாததே இந்தத் தடைக்கு முக்கியக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணைச் சரிவர இணைக்காத மற்றும் கே.ஒய்.சி முறையைப் பூர்த்தி செய்யாத கணக்குகளுக்கு அரசு அனுப்பும் தொகை தற்காலிகமாகத் தேக்கமடைந்துள்ளது.

அதேவேளையில், தகுதியான நபர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தின் பயன்கள் சென்றடைவதை உறுதிசெய்யும் பொருட்டு அரசு நடத்திய மறுஆய்வில் சில முக்கிய நீக்கங்களும் செய்யப்பட்டுள்ளன. குடும்பத்தில் அரசு ஊழியர்கள் இருப்பவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ள குடும்பங்களின் மகளிர் இத்திட்டத்தின் தகுதி வரம்பிற்குள் வரமாட்டார்கள் என்பதால், அவர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. எனவே, தகுதியிருந்தும் உரிமைத்தொகை வராத பயனாளிகள் உடனடியாகத் தங்கள் வங்கிக் கிளைக்குச் சென்று e-KYC விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.