தமிழ் சினிமா துறைக்கு மிக பிரம்மாண்டப்படமான சிவகார்த்திகேயன் நடிப்பில் “எதிர்நீச்சல்” படத்தை கொடுத்த “ஆர் எஸ் துரை செந்தில்குமார்” அவர்களின் தற்போது காமெடி நடிகராக வளம் வந்து தமிழ் சினிமா முன்னணி ஹீரோவாக மாறிய “சூரி” அவர்களை வைத்து “கருடன்” என்ற படத்தை இவர் இயக்கி தற்போது முடித்து நிலையில் உள்ளது இப்படம்.
தற்போதைய படத்தில் சூரி யுடன் இணைந்து சசிகுமார், சமுத்திரகனி, சிவடா நாயர், உன்னி முகுந்தன் போன்ற பல பிரபலங்கள் இருக்கிறார்கள். முன்னணி நடிகரான சசி குமாருக்கு இப்படத்தில் 2 கோடி தான் சம்பளமா, ஆனால் தற்போது வளர்ந்து வந்த சூரிக்கு 8 கோடி சம்பளமாமாம். அந்த அளவிற்கு சூரியவர்களின் கரியர் மேலோக்கிச் சென்றிருப்பது என்றே கூறலாம். மார்ச் மாதம் 29ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வழியாக இருந்தது.
மார்ச் 29 ஆம் தேதி புனித வெள்ளி தொடர்ந்து விடுமுறை நாட்களாக அமைவதால் இப்படத்திற்கு நல்ல கலெக்ஷன் வரும் என்று எதிர்பார்த்து அந்த தேதியில் வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் தற்போது இப்படம் மார்ச் மாதம் வெளியாகவது மிக சந்தேகமாக உள்ளது. ஏனென்றால், மார்ச் மாத இறுதியில் கிரிக்கெட் ஐபிஎல் தொடங்க உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் அந்த கிரிக்கெட்டில் மூழ்கி படத்திற்கு பெரிய இடையூறாக இருந்து படத்தின் கலெக்ஷனை சரிவடைய செய்யும் என்று யூகிக்க முடிகிறது,
அதனால் பட குழு திடீர் என்று ஏற்பட்ட இந்த பிரச்சனையை எப்படி கை கொள்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். இப்படத்தை மார்ச் மாதமே வெளியிடலாமா அல்லது வேற ஒரு நல்ல தேதியில் வெளியிடலாமா என்று யோசித்து வருகிறார்களாம். இப்பொழுதுதான் சூரிய அவர்களின் கரியர் ஒரு மேல் நோக்கி சென்று கொண்டிருந்தது, எதுவும் நடக்கவில்லை என்று நினைத்தபோது திடீரென்று இப்படி ஒரு சம்பவம் நேர்ந்துள்ளதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
