கடலூர் மாவட்டம் கொரக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்மணியம்மாள்(60). இவர் சம்பவம் நடைபெற்ற அன்று 100 நாள் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன்(39) என்பவர் மூதாட்டிக்கு லிப்ட் கொடுத்துள்ளார். அவர் ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்று மூதாட்டியின் மூன்று பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடினார்.
இதுகுறித்து மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரபாகரனை கைது செய்து 3 பவுன் தங்க சங்கிலி மற்றும் 75 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் அந்த பணத்தை இன்ஸ்பெக்டர் பிருந்தா கணக்கில் காட்டாமல் கையாடல் செய்தது தெரியவந்தது. இதனால் எஸ்பி ஜெயக்குமார் பிருந்தாவை ஆயிதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
