மணிரத்னம் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ் பெற்ற இயக்குனர் ஆவார். இயக்குனர் மட்டுமல்லாமல் தயாரிப்பு திரைக்கதை என பன்முகங்களைக் கொண்டவர். இவரது இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட மாட்டோமா என்று அனைத்து நடிகர்களும் விரும்புவர். அப்படி ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு படத்தை இயக்குபவர் மணிரத்னம். 1980, 90களில் கே பாலச்சந்தர் பாலுமகேந்திரா வரிசையில் மணிரத்னம் தனது
இவருடைய படங்கள் சிறப்பான திரைக்கதைக்கும் நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும் சுருக்கமான வசனங்களுக்கும் பெயர் பெற்றது ஆகும். மணிரத்னம் யாரிடமே உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக பல்லவி அனுப்பல்லவி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 1986 ஆம் ஆண்டு இவர் இயக்கிய மௌனராகம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து நாயகன், ரோஜா, பம்பாய், உயிரே, அலைபாயுதே என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கியவர் மணிரத்னம்.
இவரது படங்களில் பெண்களின் கதாபாத்திரம் என்பது மிகவும் ஸ்ட்ராங்காகவும் தனித்துவமான தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்நிலையில் மணிரத்தினம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, “மணிரத்தினம், AR ரஹ்மான் காம்போவில் வந்த திரைப்படம் அலைபாயுதே. இந்த படத்தில் மாதவனின் intro சீனுக்கு மணிரத்தினம் Backstreet படத்தின் பாடலை வச்சு ஷூட் பண்ணியிருக்காரு. இதை பயன்படுத்த அவங்களிடம் permission கேட்கும்போது 1 கோடி ரூபாய் பணம் கேட்டிருக்காங்க.
அவ்வளவு பணம் அப்போ இல்லாததால் ரகுமானிடம் அந்த பகுதிக்கு ஏற்றார் போல ஒரு பாடலை மியூசிக் பண்ண சொல்லி கேட்க அதற்கு ரகுமான் போட்ட பாடல் தான் என்றென்றும் புன்னகை பாடல். அதன்பின்னர் ஆறு வருடம் கழித்து Inside man என்ற படத்திற்கு அப்போ உலக ஹிட் ஆன உயிரே படத்திலிருந்து தக்க தைய தையா தையா பாடலை அவங்க யூஸ் பண்ண கேட்டிருக்காங்க. அதற்கு தில் சே வோட மியூட் லேபிளில் ஹாலிவுட்டில் நமக்கு பெருமை தானே என்று இலவசமா யூஸ் பண்ண சொல்லிட்டாங்களாம். ஆனால் மணிரத்தினம் அலைபாயுதே படத்துல அவங்க பாட்டை யூஸ் பண்ண மட்டும் 1 கோடி கேட்டாங்க. நாம மட்டும் ஏன் பணம் கொடுக்கணும்னு சொல்லி 1 கோடி ரூபாய்க்கு insideman டீமிற்கு கொடுத்தாராம்.
மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 22) சற்று சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…
பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளைச் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கு அவர்கள்…
சண்டிகரில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் 20 பெண் ஊழியர்கள், சக ஆசிரியர் ஒருவர் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக்…