தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்…. யாருடன் கூட்டணி?…. கிருஷ்ணசாமி எடுத்த முக்கிய முடிவு….!

By Nanthini on பங்குனி 11, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய தமிழகம் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்து, அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இன்று கோவையில் உள்ள தனது ‘பொதிகை இல்லத்தில்’ முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய கட்சிகளில் கூட்டணியை அறிவிக்காத ஒரே கட்சியாக புதிய தமிழகம் நீடிக்கும் நிலையில், திமுக, பாஜக மற்றும் தவெக ஆகிய தரப்புகள் கிருஷ்ணசாமியுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிகின்றன. குறிப்பாக, கடந்த காலங்களில் ‘ஆட்சியில் பங்கு’ என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கிருஷ்ணசாமி, விஜய்யின் தவெக பக்கம் சாய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கருதப்படும் சூழலில், இன்றைய ஆலோசனை கூட்டம் அவர் எத்தகைய அதிரடி முடிவை எடுக்கப் போகிறார் என்பதைத் தீர்மானிப்பதாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.