“என் பொண்டாட்டிய கொன்னுட்டேன்!”.. போலீசுக்கு போன் செய்துவிட்டு சடலத்தின் அருகே அமர்ந்திருந்த கணவன்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

By Muthu Mani on வைகாசி 24, 2026

Spread the love

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவரஞ்சனி என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த சில காலமாகவே சரவணன் தனது மனைவி சிவரஞ்சனியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் மே 23 அன்று இருவருக்குள்ளும் மீண்டும் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த சரவணன் வீட்டில் இருந்த மின் மோட்டாரைத் தூக்கி சிவரஞ்சனியின் தலையில் போட்டுள்ளார். இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சிவரஞ்சனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சரவணனே திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் சடலம் அருகே சரவணன் அமர்ந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே சரவணனைக் கைது செய்த போலீசார், சிவரஞ்சனியின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.