போதை தலைக்கேறியதால் வந்த வினை…! மனைவியின் சடலத்துடன் இரவு முழுக்க தூங்கிய கணவன்…. அதிர வைத்த பயங்கரம்…!!

By Devi Ramu on மார்கழி 30, 2025

Spread the love

சென்னை போரூர் பகுதியில் வசித்து வந்த கார் ஓட்டுநர் சத்யராஜ், மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் தனது மனைவி ரோஸியின் நடத்தையில் அடிக்கடி சந்தேகம் கொண்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி இரவு, போதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த சத்யராஜ், ரோஸியின் தலையைச் சுவரில் ஓங்கி மோதியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த ரோஸி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி இறந்தது கூட தெரியாமல், அந்தச் சடலத்தின் அருகிலேயே இரவு முழுவதும் சத்யராஜ் நிம்மதியாகத் தூங்கியுள்ளார். மறுநாள் காலையில் போதை தெளிந்த பின் மனைவி உயிரிழந்ததைக் கண்ட சத்யராஜ், பயந்துபோய் அங்கிருந்து தப்பியோடினார்.

   

இரவு முழுவதும் பெற்றோர்களுக்கு இடையே சண்டை நடந்ததை அறியாத குழந்தைகள், காலையில் தாய் நீண்ட நேரமாகியும் எழாததால் உறவினர்களிடம் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்து பார்த்தபோதுதான் கொலையுண்டது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த சத்யராஜைப் போலீசார் தேடிப் பிடித்துக் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.