செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்த சரண் (20) மற்றும் மதுமிதா ஆகிய இருவரும் இரண்டு ஆண்டுகள் காதலித்து, 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் மதுமிதா தனது ஆண் நண்பருடன் கைப்பேசியில் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனை சரண் பலமுறை எச்சரித்தும் அவர் நிறுத்தாததால், ஆத்திரமடைந்த சரண், நேற்று மாலை செனைனேரி மலைப்பகுதிக்கு மதுமிதாவை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்குக் கொலை செய்யும் திட்டத்துடன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துச் சென்ற சரண், வாக்குவாதத்தின் போது மதுமிதாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். அதன் பின்னர் வீட்டுக்குத் தப்பிச் சென்ற சரண், தனது தாயாரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மதுமிதாவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுராந்தகம் போலீசார் சரணைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட சரண் மீது ஏற்கெனவே கஞ்சா வழக்குகள் உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. திருமணமான நான்கே மாதத்தில் மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான முத்துக்காளை, இன்று காலை தனது மனைவியின் உடல்நிலை குறித்து கண்ணீருடன் வீடியோ ஒன்றை…
தமிழக பட்ஜெட்டில் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டத்தை செப்டம்பர் அல்லது நவம்பர் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் நேரிட்ட மிகக் கொடூரமான சாலை விபத்தில் இரண்டு பெண்கள்…
நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோருக்கு இடையேயான விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப…
நகரும் இரயிலில் பயணித்த பெண் ஒருவர், பாரம்பரிய 'வட் சாவித்திரி' பூஜையை இரயிலின் உள்ளேயே செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி…
நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து சென்னை கோட்டை தலைமைச் செயலகத்திற்கு முதலமைச்சர் விஜய் தினமும் பயணிப்பதால், சுமார் 17 கிலோமீட்டர்…