“என்னை கருணைக் கொலை பண்ணுங்க” என் மனைவியின் டார்ச்சர் தாங்க முடியல.. கலெக்டரிடம் கதறிய கணவர்..!!

By Soundarya on வைகாசி 30, 2026

Spread the love

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த கிரீட் படேல் என்ற வாலிபர், தனது மனைவியின் தொடர் சித்ரவதைகளைத் தாங்க முடியாமல் தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-வது திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு அவரது மனைவி தொடர்ந்து பணம் கேட்டு அவரைப் படுத்தி எடுத்துள்ளார்.

அந்த வாலிபரின் முந்தைய திருமணக் குழந்தையையும் அவரது மனைவி சித்ரவதை செய்துள்ளார். குடும்பச் சண்டைகளின் போது பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி, அடிக்கடி காவல்துறை மற்றும் பெண்கள் உதவி எண்கள் மூலம் தனக்கு எதிராகப் பொய்ப் புகார்களை அளித்து வந்ததாக வாலிபர் குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே முந்தைய கணவர்களிடமிருந்தும் இதேபோலப் பணம் பறித்த அந்தப் பெண், ஒரு ‘கொள்ளைக்கார மணமகள்’ என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

   

இது குறித்துப் பலமுறை போலீசில் புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடும்பச் சண்டைகளை எதிர்கொள்ளும் ஆண்களுக்குச் சட்டப் பாதுகாப்பு இல்லை என்றும், இப்பிரச்சனைகளால் விரக்தியின் உச்சிக்குச் சென்றுள்ளதால் தன்னை கருணை கொலை செய்ய வேண்டும் என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தவறான முடிவை எடுக்க நேரிடும் என்றும் கலெக்டரிடம் அவர் கதறியுள்ளார்.