“2 மனைவி, 7 குழந்தைகள்” 3-ஆவது கர்ப்பமாக இருக்கும்போது 4-வது காதலி… செல்போனால் சிக்கிய “22 வயது காதல் மன்னன்” செய்த கொடூரம்…!!

By Soundarya on தை 3, 2026

Spread the love

பஞ்சாபில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த சிந்து ரிஷிதேவ் என்பவர், தன்னுடன் பணியாற்றிய கைலாஷ் என்பவரின் மகள் மஞ்சு குமாரியை காதலித்துத் திருமணம் செய்துள்ளார். சிந்துவை ஒரு நல்ல இளைஞன் என நம்பிய கைலாஷ், தனது மகளை அவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு இவர்கள் அனைவரும் சமீபத்தில்தான் சொந்த ஊரான பூர்ணியாவிற்குத் திரும்பியுள்ளனர். இருப்பினும், தனது கணவரின் பின்னணி குறித்து மஞ்சு குுமாரிக்குத் தெரிய வந்தபோதுதான் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

விசாரணையில், சிந்து ரிஷிதேவ் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்தவர் என்பதும், அவருக்கு இரண்டு மனைவிகள் மூலம் மொத்தம் ஏழு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. தற்போது மஞ்சு குுமாரி அவரது மூன்றாவது மனைவியாகவும், நான்கு மாத கர்ப்பிணியாகவும் இருக்கும் நிலையில், சிந்து நான்காவது பெண்ணுடன் காதல் தொடர்பில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார். சிந்துவின் செல்போனில் பல பெண்களின் எண்கள் இருந்ததும், அவர் அவர்களுடன் அடிக்கடி பேசி வந்ததும் மஞ்சுவிற்குத் தெரியவந்தது. இதனை மஞ்சு தட்டிக்கேட்டதால் குடும்பத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

   

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தனது கணவருடன் பஜாரிற்குச் சென்ற மஞ்சு குமாரி, அதன் பிறகு மர்மமான முறையில் காணாமல் போனார். மகளைத் தேடி அவரது பெற்றோர் மாமியார் வீட்டிற்குச் சென்றபோது, அங்குள்ளவர்கள் முறையான பதில் அளிக்காமல் இருந்ததால் சந்தேகம் வலுத்தது. இந்தச் சூழலில், மறுநாள் கிராமத்தில் உள்ள மூங்கில் தோப்பு ஒன்றில் மஞ்சு குமாரி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் இலைகள் மற்றும் புதர்களால் மறைக்கப்பட்ட நிலையில் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

   

தகவலறிந்து வந்த அக்பர்பூர் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், மஞ்சு குமாரி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது கணவனின் பல திருமணங்கள் மற்றும் கள்ளத்தொடர்புகளைக் கண்டுபிடித்துத் தட்டிக்கேட்டதால், சிந்து ரிஷிதேவ் மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்ததாகப் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள சிந்து ரிஷிதேவ் மற்றும் அவரது உறவினர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.