என்னது… மனுஷனுக்கே பிரிட்ஜா?… ஜப்பான்காரன் கண்ட பிடிச்ச ‘ஹியூமன் ஃப்ரிட்ஜ்’… வெறும் 10 நிமிஷத்துல குளுகுளுனு ஆயிடுவீங்க…!!

By Swetha on ஆடி 24, 2026

Spread the love

உலகளாவிய காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் கோடை வெப்ப அலையிலிருந்து மக்களைப் பாதுகாக்க, ஜப்பானிய அறிவியலாளர்கள் ‘மனிதர்களுக்கான பிரிட்ஜ்’ எனும் அதிநவீன சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். தெருக்களில் காணப்படும் குளிர்பான ‘வெண்டிங் மெஷின்’ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சிறிய பெட்டி போன்ற அமைப்பில் , மனிதர்கள் சௌகரியமாக அமரலாம். இதன் உட்புற வெப்பநிலை எப்போதும் 15°C ஆகப் பராமரிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனுள் அமரும் நபரின் தலை, கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் 5°C அளவிலான குளிர்ந்த காற்று வீசப்பட்டு, 5 நிமிடங்களில் உடனடி நிவாரணமும், 10 நிமிடங்களில் உடலின் உள் வெப்பநிலை முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், உடல் அளவுக்கு அதிகமாகக் குளிர்ந்து மரத்துப்போவதைத் தடுக்க, 20 நிமிடங்களுக்குப் பிறகு தானாகவே குளிரூட்டுவதை நிறுத்தும் ‘ஆட்டோ ஷட்-ஆஃப்’ வசதியும் இதில் உள்ளது. சாதாரண ஏ.சியை விட இது 50% குறைவான மின்சாரத்தையே பயன்படுத்துகிறது.

   

தற்போது ஜப்பானின் நகராட்சி அலுவலகங்கள், பொது ஓய்வறைகள் மற்றும் தொழிற்சாலைகளில் முதற்கட்டமாக நிறுவப்பட்டு வரும் இச்சாதனத்தின் விலை சுமார் 1.5 மில்லியன் யென் ஆகும். மின்சாரச் செலவு குறைவு என்றாலும், ஒரே ஏசி அறையில் பலர் அமர்ந்து வெப்பத்தைத் தணிக்கும் முறையோடு ஒப்பிடுகையில், ஒரு தனிநபருக்கான இந்தச் சாதனத்தின் அதிகப்படியான விலை பட்ஜெட் சார்ந்த நாடுகளுக்கு எந்தளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.