கடவுளே… நண்பரைப் பார்க்கச் சென்றபோது நேர்ந்த கொடூரம்… 24 வயது இளம் பெண்கள் விபத்தில் பலியான அதிர்ச்சி சம்பவம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

By Swetha on ஐப்பசி 23, 2026

Spread the love

கேரளாவின் கோட்டயம் மாவட்டம் பாம்பாடி அருகே நடைபெற்ற சோகமான சாலை விபத்தில், இருபத்தி நான்கு வயதுடைய ஆஷ்லே அன் தாமஸ் மற்றும் கிருபா மெரின் குரியன் ஆகிய இரண்டு இளம் தோழிகள் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் கோட்டயத்திலிருந்து கானம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர்களின் ஸ்கூட்டர் ஒரு காரில் உரசி நிலைதடுமாறி எதிரே வந்த தனியார் பேருந்துக்கு அடியில் சிக்கியது. சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த ஆஷ்லே அன் தாமஸ் ஒரு பட்டயக் கணக்காளர் மாணவி ஆவார்; தன் சாதனையைக் கொண்டாடவிருந்த நிலையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. மற்றொருவரான கிருபா மெரின் குரியன், ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தில் முதுகலை சமூகப் பணி படித்து வந்த நிலையில், விடுமுறைக்காக அண்மையில் சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தார். பள்ளிப் பருவத்திலிருந்தே நெருங்கிய தோழிகளான இவர்கள் இருவரும், எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த விபத்தில் உயிரிழந்தது அவர்களது குடும்பத்தினரையும் உறவினர்களையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

   

இந்த விபத்து குறித்து பாம்பாடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாலைகளில் உள்ள தடைகள் மற்றும் விபத்திற்கான உண்மையான காரணங்கள் குறித்து தடயவியல் நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த இரு தோழிகளின் இறுதிச் சடங்குகள் முறையான மத வழிபாடுகளுடன் சொந்த ஊர்களில் உள்ள தேவாலயங்களில் நடைபெற்றன.