“மரண பயம் காட்டிய சிறுத்தை…! கழுத்தைக் கவ்வப் பார்த்த கொடூரம்… ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய டெலிவரி பாய்…!!”

By Swetha on ஆடி 8, 2026

Spread the love

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரின் பிச்சோலி மர்தானா குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று, டெலிவரி ஊழியரைத் தாக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8:30 மணியளவில், பைக் மூலம் டெலிவரி செய்ய வந்த ஊழியரை நோக்கி சாலையில் சுற்றித்திரிந்த சிறுத்தை திடீரென பாய்ந்தது. சற்றும் எதிர்பாராத அந்த இளைஞர் நிலைதடுமாறிய நிலையில், சிறுத்தை உடனடியாக விலகிச் சென்றது; இதனால் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். இந்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.

டெலிவரி ஊழியரைத் தாக்கிய பின், அந்த சிறுத்தை அருகில் இருந்த ஒரு வீட்டின் குளியலறைக்குள் நுழைந்து, பின்னர் ஸ்ரீஜி பள்ளத்தாக்கு பகுதியை நோக்கி ஓடியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கனடியா காவல் துறையினரும் வனத்துறையின் மீட்புக்குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

   

பாதுகாப்பான குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நுழைந்ததற்கு, அப்பகுதியில் பெய்த தொடர் கனமழைதான் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழையினால் ‘கூடல்’ என்ற வனப்பகுதியிலிருந்து வழிதவறி அது ஊருக்குள் வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்க இரண்டு காவல் வாகனங்கள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் இரவில் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும், சிறுத்தையைக் கண்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறும் வனத்துறையினரும் காவல்துறையினரும் எச்சரித்துள்ளனர்.