வாரணாசியின் அகதா பகுதியில் உள்ள ப்ளே ஸ்கூல் ஒன்றில், நர்சரி பயிலும் ஐந்த வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் வகுப்பில் சிறுநீர் கழித்துவிட்டான் என்ற காரணத்திற்காக, பள்ளியின் ஆசிரியை ஒருவர் சமையலறைக் கத்தியை சூடேற்றி அச்சிறுவனின் அந்தரங்க உறுப்பில் சுட்டு கொடூரமான தண்டனை வழங்கியுள்ளார். இதனால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனின் தந்தை, இதுகுறித்து உடனடியாகக் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகாரளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
https://twitter.com/nextminutenews7/status/2081702842230821110/photo/1
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எத்தகைய உதவியும் செய்யாத பள்ளி நிர்வாகம், இச்சம்பவம் வெளியே தெரிவதைத் தடுத்து மிரட்டல் விடுத்ததாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். கல்விக்கூடமாகச் செயல்பட வேண்டிய ஒரு பள்ளியில் பிஞ்சு குழந்தையின் மீது இத்தகைய அரக்கத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தவறிழைத்த ஆசிரியை மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
