நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்..! 6 வயது சிறுமியை நாசமாக்கி மாடியிலிருந்து தூக்கி வீசிய கொடூரம்… 3 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த போலீசார்..!!

By Soundarya on தை 4, 2026

Spread the love
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹரில் 6 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 2,  அன்று இரவு நிகழ்ந்த இந்த கொடூரச் செயலுக்குப் பிறகு, குற்றத்தை மறைப்பதற்காகச் சிறுமியின் உடலை வீட்டின் கூரையிலிருந்து குற்றவாளிகள் கீழே வீசியுள்ளனர். வீட்டின் பின்புறம் உள்ள வயலில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், அவர்கள் வீட்டில் குடியிருந்த ராஜு மற்றும் வீரு காஷ்யப் ஆகிய இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மூத்த காவல் கண்காணிப்பாளர் அமைத்த தனிப்படை போலீஸார், தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தி மூன்றே மணி நேரத்திற்குள் கட்டுமானப் பணி நடைபெறும் ஒரு பகுதியில் மறைந்திருந்த சந்தேக நபர்களைக் கண்டுபிடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.