வங்கதேசத்தில் தொடரும் பதற்றம்..! 7 வயது சிறுமியை உயிரோடு தீ வைத்து எரித்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

By Soundarya on மார்கழி 21, 2025

Spread the love

வங்கதேசத்தில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு இடையே அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  லஷ்மிபூர் பகுதியில் உள்ள வங்கதேச தேசியக் கட்சி (BNP) தலைவரின் வீட்டைப் போராட்டக்காரர்கள் வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு, தீ வைத்துத் தாககுதல் நடத்தியுள்ளனர்.

இந்த கோர விபத்தில் சிக்கிய பெரியவர்கள் தீக்காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், ஆயிஷா அக்தர் என்ற 7 வயது சிறுமி வெளியேற முடியாமல் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் மேலும் மூன்று பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.