“சாமி அமைச்சர்”…. சட்டசபையில் MRK போட்ட ஒரே போடு…. வாய்விட்டு குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்…!

By Nanthini on ஆவணி 10, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றப் பேரவை என்றாலே காரசாரமான விவாதங்களும் எதிரெதிர் கருத்து மோதல்களும் நிறைந்த களமாகவே இருக்கும். ஆனால், அதே பேரவையில் உறுப்பினர்களின் சுவாரசியமான நகைச்சுவை பேச்சுக்கள் அவ்வப்போது அவையை அமைதிப்படுத்தி, பேரவையை கலகலப்பாக்கும். அந்த வகையில், திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விகளும், அதற்கு ஆளுங்கட்சி தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட சுடச்சுட பதில்களும் அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தின. ‘யார் ஆட்சியில் விவசாயிகள் டென்ஷனாக இருந்தார்கள்?’ என்பது குறித்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசிய பேச்சுக்கு, அமைச்சர்கள் பதிலளித்த விதம் பேரவை விவாதத்தை சுவாரசியமான தளத்திற்கு எடுத்துச் சென்றது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஒரு அழகான திரைக்கதையை தயாரித்து வந்து பேரவையில் பேசியிருப்பதாகச் சாடினார். கடந்த ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் எதிர்கொண்ட போராட்டங்கள், நெல் சேமிப்புக் கிடங்கு கோரிக்கைகள் மற்றும் கரும்பு கொள்முதல் விலை தொடர்பான சிக்கல்களை சுட்டிக்காட்டிய அவர், “முக்கியமான ஒரு விவசாயியை பற்றிப் பேச அண்ணன் மறந்துவிட்டார்; கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் போட்டு நடந்த விவசாயியைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை” என மு.க.ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்து அவையின் கவனத்தை ஈர்த்தார்.

   

அமைச்சரின் இந்த விமர்சனத்திற்கு உடனடியாகப் பதிலடி கொடுக்க எழுந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “இப்பதான் தெரியுது நீங்க எப்படியெல்லாம் பிரச்சாரம் பண்ணிருக்கீங்கன்னு… மாண்புமிகு சாமி அமைச்சர்… இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…” என்று நகைச்சுவை தும்பத் தொடங்கினார். இதைக் கேட்ட முதல்வர் விஜய் குலுங்கி குலுங்கிச் சிரிக்க, பேரவையே சிரிப்பலையில் மூழ்கியது. “இப்படி டெக்னிக்காக பேசிதான் ஆட்சியைப் பிடித்திருக்கிறீர்கள்” என்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூற, “அந்த டெக்னிக்கை இப்போதுதான் உங்களிடம் கற்றுக்கொண்டேன்” என அமைச்சர் ரமேஷ் உடனடியாகப் பதிலளித்தார். இவ்வாறு அரசியல் சாடல்களுக்கு இடையிலும் இருதரப்பு உறுப்பினர்களின் சுவாரசியமான பதிலடிகள் சட்டமன்றத்தை கலகலப்பான சூழலில் வைத்திருந்தன.