விடிய விடிய போன் பேசி “உல்லாசமாக இருக்கலாம்” என அழைத்த பெண்.. பந்தாவாக போன தொழிலதிபர் மகனுக்கு காத்திருந்த ட்விஸ்ட்.. கர்நாடகாவில் அரங்கேறிய ‘ஹனிடிராப்’ மாஃபியா…!!!

By Muthu Mani on வைகாசி 21, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் தாவணகெரே புறநகர் பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் 25 வயது மகனுக்கு, சமீபத்தில் மர்மப் பெண் ஒருவரின் அறிமுகம் செல்போன் மூலம் கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் அது தவறான அழைப்பு (Wrong Call) என்று கூறிய அந்தப் பெண், பின்னர் தொடர்ந்து பேசி இளைஞரைத் தனது வலையில் வீழ்த்தியுள்ளார். விடிய விடிய நீடித்த இவர்களது செல்போன் உரையாடல், நாளுக்கு நாள் நெருக்கமாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில், “நேரில் வந்தால் உல்லாசமாக இருக்கலாம்” என அந்தப் பெண் ஆசை வார்த்தை கூற, அதனை உண்மை என்று நம்பிய இளைஞர், ஆள்நடமாட்டம் இல்லாத தனிமையான இடத்திற்குச் செல்ல சம்மதித்துள்ளார்.

நெருக்கமான சந்திப்பிற்காகக் கழுத்து நிறைய தங்கச் சங்கிலி, பர்ஸ் நிறைய பணம் என ஆடம்பரமாக அந்த இடத்திற்குச் சென்றுள்ளார் அந்த இளைஞர். ஆனால், அங்கு அவருக்குக் காத்திருந்தது பெரும் அதிர்ச்சி. அந்தப் பெண்ணுடன் கைகளில் உருட்டுக் கட்டைகளுடன் நான்கு குண்டர்கள் தயாராக நின்றிருந்தனர். வந்தவரைச் சுற்றி வளைத்துத் சரமாரியாகத் தாக்கிய அந்தக் கும்பல், அவரிடமிருந்த தங்கச் சங்கிலி, விலையுயர்ந்த கடிகாரம், பணம் மற்றும் அவர் வந்த வாகனம் ஆகியவற்றை மிரட்டிப் பறித்துக் கொண்டது. அத்துடன் நிற்காமல், அந்தப் பெண்ணுடன் அவர் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை எடுத்து, “வீட்டிற்கு அனுப்பிவிடுவோம்” என மிரட்டி வங்கியிலிருந்த பணத்தையும் பறித்துவிட்டு தப்பியோடியது.

   

பாதிக்கப்பட்ட இளைஞர் தேம்பித் தேம்பி அழுதுவிட்டு, பின்னர் தாவணகெரே புறநகர்க் காவல் நிலையத்தில் இதுகுறித்து விரிவான புகார் அளித்தார். புகாரைப் பெற்ற காவல்துறை அதிகாரிகள் உடனடியாகத் தனிப்படை அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்த ஹனிட்ராப் (Honeytrap) கும்பல் மாநில எல்லையைக் கடந்து தப்பிப்பதற்குள், இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரைப் போலீஸார் பொறி வைத்துப் பிடித்தனர். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தாவணகெரே பகுதியைச் சேர்ந்த பஞ்சமி, ஜெகதீஷ், கங்கா, மல்லேஷ் நாயக் மற்றும் வெங்கடேஷ் என்பது தெரியவந்தது.

   

இவர்கள் திட்டமிட்டே பணக்கார வீட்டு இளைஞர்களைக் குறிவைத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இக்கும்பலின் முக்கியப் புள்ளியான பஞ்சமி என்ற பெண், தனது அழகிய பேச்சால் இளைஞர்களைக் கவர்ந்து வரவழைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். அவர் அழைத்து வந்ததும், மறைந்திருக்கும் மற்ற கூட்டாளிகள் மிரட்டிப் பணம் பறிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 80 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த சுரேஷ் என்ற மற்றொரு நபரையும் கைது செய்த போலீஸார், கைதான ஐந்து பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.