தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்ட ‘சதுரங்க வேட்டை’ பட ஹீரோயின்?….. என்னது அவருக்கு குழந்தையே பிறக்க போகுதா….. வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்….

By Begam on புரட்டாதி 19, 2022

Spread the love

‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை இஷாரா நாயர். இவருக்கு  தொழிலதிபர் ஷாஹில் என்பவருடன் திருமணம் நடந்தது. தற்பொழுது இவர் கர்ப்பமாக இருப்பதாக தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘வெண்மேகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இஷாரா நாயர். இதைத்தொடர்ந்து பப்பாளி, சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான ‘சதுரங்க வேட்டை’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தையும் ஏற்படுத்தியது .

   

   

இது தொடர்ந்து அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை . எனவே அவர் வெளிநாடு வாழ் இந்தியர் ஆன தொழில் அதிபர் சாகில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டுவிட்டு குடும்பத்தை கவனிப்பதில் கவனம் செலுத்தி கொண்டுள்ளார்.

 

எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்பொழுது தனது கணவருடன் இணைந்து தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்தின் மூலம் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது.