தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாகவும், அரசியலில் முதல்வராகவும் இருந்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை பிடித்து வைத்திருந்தவர் தான் எம்ஜிஆர். அதே சமயம் சினிமாவில் இவருடைய ஆரம்ப கால வாழ்க்கையானது அவ்வளவு எளிய வாழ்க்கையாக இல்லை என்பது பலரும் அறியாத ஒரு விஷயம். 1936 ஆம் வருடம் ராதா நடிப்பில் வெளியான சதிலீலாவதி படம் மூலம் தான் எம்ஜிஆர் சினிமா துறைக்கு அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெற்று இருந்தாலும் அடுத்தடுத்து இவருக்கு அதே போன்ற கேரக்டர் தான் கிடைத்துள்ளது இதனால் நடிக்கலாமா? வேண்டாமா என்ற எண்ணத்திலேயே இருந்துள்ளார். இதனால் பல ப.ட வாய்ப்புகளையும் தவற விட்டுள்ளார். அதே சமயம் வித்தியாசமான கேரக்டர்களில் சில துணை நடிகராகவும் நடித்திருக்கிறார்.

பல போராட்டங்களுக்குப் பிறகு 1947 ஆம் வருடம் வெளியான ராஜகுமாரி என்ற படம் தான் எம்ஜிஆரை ஹீரோவாக நடிக்க வைத்த முதல் திரைப்படம். இந்த படத்திற்கு முன்பே ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வந்த எம்ஜிஆர் நீக்கிவிட்டு அந்த படத்தில் பியூ சின்னப்பாவை வைத்து படம் எடுத்தார்களாம். இதன் காரணமாக ராஜகுமாரி படத்திலும் அப்படி ஒரு சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதில் எம்ஜிஆர் உறுதியாக இருந்திருக்கிறார். ஆனாலும் கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்த படத்தின் சூட்டிங் பல தடைகளை கடந்தே தயாராகி வந்திருக்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் எடுத்தவரை படத்தை போட்டு பார்த்த தயாரிப்பாளர் ஜூப்பிடர் பிக்சர்ஸ் சோமு மற்றும் இவரோடு இருந்த இணை தயாரிப்பாளர்களுக்கு படம் அவ்வளவு திருப்தியாக இல்லை இதனால் படத்தை கைவிட்டு விடலாம் என்றும் முடிவு செய்திருக்கிறார்கள்.

அதே சமயம் ஜூபிடர் பிக்சர்ஸ் சோமு பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது இன்னும் கொஞ்சம் தான் பாக்கி இருக்கிறது. மீதியும் எடுத்துவிட்டு அதன் பிறகு யோசிக்கலாம் என்று கூறியிருக்கிறார். ஜூபிடர் பிக்சர்ஸ் அதற்கு முன்பு தயாரித்த இரண்டு படங்கள் தோல்வியை சந்தித்ததால் மூன்றாவது படமும் தோல்வியில் முடிந்து விடக்கூடாது என்பதால் ஜூப்பிட்டர் பிக்ச்சர் சோமு கூறியதை தொடர்ந்து ஒப்புக்கொண்டிருந்தனர். இதன் காரணமாக படப்பிடிப்பு தாமதமாக நடந்ததால் 18 மாதங்கள் ஷூட்டிங் நடந்துள்ளது. தனக்கான சம்பளத்தை பேசி முழுவதுமாக வாங்கிவிட்ட எம்ஜிஆர் அடுத்த படப்பிடிப்பின் போது தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் என்ன செய்வதென்று தெரியாமல் படத்தை பாதியிலேயே கோவையில் இருந்து சென்னைக்கு திரும்பிவிடலாம் என்று யோசித்து அதற்காகவும் முயற்சித்துள்ளார்.

அப்போது அவரை சந்தித்த படத்தின் நடன இயக்குனர் குமார் தான் உங்களுக்கு ஹீரோவாக வைத்து படம் எடுக்க யாரும் தயாராகவில்லை. ஆனால் ஜூபிட்டர் பிக்சர்ஸ் சோமு உங்களை ஹீரோவாக மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார். அவர் விருப்பத்தின்படி இந்த படத்தின் நடிக்காவிட்டால் நீங்கள் இந்த ஷூட்டிங்கிலிருந்து வெளியே செல்லக்கூடாது என்று கூறி 1800 ரூபாய் கொடுத்துள்ளார். இந்த பணத்தை உங்களால் முடியும் போது திருப்பிக் கொடுங்கள் . இது வைத்துக்கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார் .பல தயாரிப்பாளர்கள் படம் நல்லா இல்லை என்றால் கைவிட்டு விடலாம் என்று நினைத்த ராஜகுமாரி படம் தான் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று எம் ஜி ஆர் க்கு முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தையும் பெற்று கொடுத்தது.
