மகாராஷ்டிராவின் யவத்மால் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று துல்ஜாபூரில் இருந்து சம்பாஜிநகர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் ஏறியுள்ளார். பேருந்து பாதி வழியில் சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பெண் திடீரென தனது குழந்தைகளைப் பேருந்திலேயே தவிக்கவிட்டு விட்டுக் கீழே இறங்கி, தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். பேருந்து மீண்டும் புறப்பட்டுச் சென்ற நிலையில், நீண்ட நேரமாகத் தாயைக் காணாமல் குழந்தைகள் இருவரும் பேருந்துக்குள் கதறி அழுதுள்ளனர்.
குழந்தைகளின் அழுகுரலைக் கேட்டு வந்த நடத்துனர் அவர்களிடம் விசாரித்தபோது, அவர்களின் சட்டைப்பையில் ஒரு துண்டுச்சீட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், “நான் என் விருப்பப்படி வாழச் செல்கிறேன். பிள்ளைகளைத் தாத்தாவிடம் ஒப்படைத்து விடுங்கள். எனக்குக் கள்ளக்காதலனுடன் இருக்கவே விருப்பம், அவருடன் உல்லாசமாக ஊர் சுற்றுவதே பிடிக்கும்” என்று எழுதி, பிள்ளைகளின் தாத்தாவின் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, நடத்துனர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர்.
துண்டுச்சீட்டில் இருந்த எண்ணை வைத்துப் போலீசார் குழந்தைகளின் தாத்தாவைப் பீட் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். போலீஸ் நிலையத்திற்கு வந்த தாத்தா, பேரக்குழந்தைகளின் நிலையை கண்டு உருகி அழுவார் என்று போலீசார் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ, “என் மகள் வீட்டில் இருந்த ஒரு மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் ரூ.20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாள்” என்று பொருள்களைப் பற்றியே கவலைப்பட்டுக் குமுறினாரே தவிர, பேரக்குழந்தைகளின் நலனில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…