“நான் அங்க வரணும்னு என் மகன் ஆசைப்படுறான், ஆனா…’ அதிபர் டிரம்பிற்கு வந்த ஆகப்பெரிய சோதனை.. அவரே உடைத்த உண்மை”..!!

By Muthu Mani on வைகாசி 23, 2026

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூத்த மகனான 48 வயது டொனால்ட் டிரம்ப் ஜூனியருக்கும், பாம் பீச் சமூகப் பிரபலமும் மாடலுமான பெட்டினா ஆண்டர்சனுக்கும் பஹாமாசில் உள்ள ஒரு சிறிய தீவில் இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளது. இந்தத் திருமணத்தில் மணமகனின் தந்தையான அதிபர் டிரம்ப் கலந்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில், தற்போதைய ஈரான் போர் பதற்றங்கள் காரணமாக இந்தத் திருமணத்தில் தம்மால் பங்கேற்பது கடினமாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் பேசுகையில், ஈரான் போர் விவகாரம் மற்றும் சில முக்கியப் பணிகள் காரணமாக மகனின் திருமணத்தில் கலந்துகொள்வது தமக்குச் சரியான நேரமாக இல்லை என்று அவரிடமே கூறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், தனது மகன் தான் கண்டிப்பாக வர வேண்டும் என்று விரும்புவதால், அந்தப் பிரம்மாண்டத் திருமண விழாவில் எப்படியாவது கலந்துகொள்ள நிச்சயம் முயற்சி செய்யப் போவதாகவும் அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.

   

மேலும், இந்தச் சூழல் தமக்கு எவ்விதத்திலும் வெற்றிபெற முடியாத ஒரு இக்கட்டான நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக டிரம்ப் வருத்தம் தெரிவித்துள்ளார். தான் ஒருவேளை நாட்டின் சூழ்நிலையைக் கருதி திருமணத்தைப் புறக்கணித்தால் குடும்ப ரீதியாகவும், மாறாகத் திருமணத்தில் கலந்துகொண்டால் நாட்டின் இக்கட்டான சூழலில் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதாகவும் இரு தரப்பிலுமே கடுமையாக விமர்சிக்கப்படுவேன் என்று அவர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.