சொத்து வரி என்பது மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மிக முக்கியமான வருவாய் ஆதாரமாகும். பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் இந்த வரியைக் கொண்டுதான் சாலை பராமரிப்பு, தெருவிளக்குகள் அமைத்தல், கழிவுநீர் அகற்றுதல், குப்பை மேலாண்மை மற்றும் பொது சுகாதாரப் பணிகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்டிடத்தின் வகை, பரப்பளவு, அமைவிடம் மற்றும் அதன் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் சொத்து வரி கணக்கிடப்படுகிறது.
சமீபத்தில் சென்னை மாநகராட்சியில் குறைவாக மதிப்பீடு செய்யப்பட்ட சில சொத்துகளுக்கு வரி மாற்றம் செய்யப்பட்டபோது பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தன. இதன் விளைவாக, பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்று, சொத்து வரி திருத்தத்தை பெருநகர சென்னை மாநகராட்சி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும், முந்தைய நடைமுறையில் இருந்த பழைய சொத்து வரியே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டு, மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், சொத்து வரி வசூலில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும், வரி ஏய்ப்பைத் தடுத்து துல்லியமாக வரி மதிப்பீடு செய்யவும் நகராட்சி நிர்வாகம் ஒரு புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இதற்காக செயற்கைக்கோள் படங்கள் (Satellite Images) மற்றும் புவியியல் தகவல் அமைப்பு (GIS – Mapping) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நகரங்களில் உள்ள ஒவ்வொரு கட்டிடத்தின் பரப்பளவு மற்றும் நில மதிப்பைக் துல்லியமாகக் கண்டறிந்து வரி விதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நவீன தொழில்நுட்ப மாற்றத்திற்காகத் தமிழ்நாட்டின் ‘ஸ்டார்ட் அப் டி.என்’ (StartupTN) நிறுவனத்தின் உதவியுடன் வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உள்ளாட்சி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. முதற்கட்டமாக திருநெல்வேலி மாநகராட்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால், விருப்பமுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ‘form.startuptn.in/S2GC’ என்ற இணையதளப் பக்கத்தில் வரும் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…
குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…
அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…