அரசுப் பணத்தில் படித்துவிட்டு துரோகமா… ஒரே நேரத்தில் மாயமான 1,420 அரசு டாக்டர்கள்… அதிர்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை… வட்டியோடு வசூலிக்க அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!

Spread the love

தமிழக அரசு மருத்துவ அமைப்பையே உலுக்கும் வகையில், 1,420 அரசு மருத்துவர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணிக்கு வராமல் இருப்பது அதிகாரப்பூர்வமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழக அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் (DME) வெளியிட்டுள்ள இந்தத் தகவல், பொதுமக்களிடையேயும் சுகாதாரத்துறையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படும் காலியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொடர்ந்து நிரப்பப்பட்டு வரும் சூழலில், இத்தனை மருத்துவர்கள் திடீரெனப் பணியில் இல்லாதது அரசு மருத்துவ சேவையின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள முக்கியக் காரணம், மருத்துவர்களின் உயர்கல்வி ஒப்பந்த மீறலாகும். அரசு மருத்துவ அலுவலர்களாகப் பணியில் சேரும் மருத்துவர்கள், மேற்படிப்பு படிப்பதற்காக நீட் தேர்வு அடிப்படையில் அனுமதி பெறுகின்றனர். அவ்வாறு அனுமதி பெறும்போது, “பட்ட மேற்படிப்பு முடித்த பிறகு, பணி ஓய்வு பெறும் வரை அரசுப் பணியில் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும்” என்ற கடுமையான நிபந்தனை விதிக்கப்படுகிறது. சில குறிப்பிட்ட படிப்புகளுக்கு மட்டுமே பிணைத்தொகை செலுத்தி பணியிலிருந்து விலக வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால், இந்த நிபந்தனைகளை ஏற்று உயர்கல்வி முடித்த சில மருத்துவர்கள், அரசுக்குத் தெரிவிக்காமல் தனியார் மருத்துவமனைகளில் அதிக ஊதியத்திற்குப் பணியாற்றச் சென்றுள்ளது தற்போதைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பணிக்கு வராத மொத்தம் 1,420 மருத்துவர்களில், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையின் கீழ் 370 பேரும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் 766 பேரும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணித் துறையின் கீழ் 284 பேரும் அடங்குவர். தற்போது இவர்களில் 1,420 மருத்துவர்கள் தொடர்ந்து பணிக்கு வராமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 680 பேர் மீது ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 740 பேர் மீது நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விதிகளை மீறியவர்களிடம் இருந்து பிணைத்தொகை மற்றும் அதற்கான வட்டித் தொகையை வசூலிக்கவும், பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்கவும் தமிழக சுகாதாரத்துறை தற்போது அதிரடி காட்டி வருகிறது.

Visaka

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

10 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

10 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

10 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

10 மணத்தியாலங்கள் ago