தெலங்கானா மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய மக்களின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் நோக்கில், அம்மாநில அரசு ‘இந்திரம்மா வீட்டுவசதித் திட்டத்தை’ மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், சொந்தமாக நிலம் வைத்திருக்கும் தகுதியுள்ள பயனாளிகளுக்குப் புதிய வீடு கட்டுவதற்காக ரூ. 5 லட்சம் நிதிஉதவியும், சொந்தமாக நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலமும் வழங்கப்பட்டு வருகிறது. அடித்தட்டு மக்களுக்குப் பாதுகாப்பான இருப்பிடத்தை உறுதி செய்யும் இத்திட்டம் மாநில முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் மாதம் தெலங்கானா மாநிலம், ஜங்கான் மாவட்டம், ஸ்டேஷன் கன்பூர் மண்டலத்தைச் சேர்ந்த இப்பகுடம் கிராமத்தைச் சேர்ந்த முதிய தம்பதியினரான கோலிபாகா வெங்கடய்யா மற்றும் வெங்கடம்மா ஆகியோர் பயனாளி பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான அதிகாரப்பூர்வத் தேர்வு ஆவணத்தைச் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கடியம் ஸ்ரீஹரி அவர்கள் நேரில் சென்று அத்தம்பதியினரிடம் வழங்கி சிறப்பித்தார். அரசின் இந்த விரைவான நடவடிக்கை அம்மாநில மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
வயதான காலத்தில் ஆதரவின்றித் தவிக்கும் முதிய தம்பதியினரைக் கண்டறிந்து, அவர்களுக்கான இருப்பிட உரிமையை நேரடியாகக் கொண்டு சேர்த்த தெலங்கானா அரசின் இந்தப் பணி முற்றிலும் பாராட்டத்தக்கது. தகுதியான நலிவடைந்த பிரிவினருக்கு உரிய நேரத்தில் அரசின் நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்யும் இத்தகைய முன்னெடுப்புகள், மாநில அரசின் வெளிப்படையான நிர்வாகத்திற்கும் சமூகப் பொறுப்பிற்கும் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…