மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில், வாத்தின் வயிற்றுக்குள் தங்கம் கண்டெடுக்கப்பட்ட வினோதமான சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லியு என்ற நபர் தான் வளர்த்த வாத்தை இறைச்சிக்காக வெட்டியபோது, அதன் வயிற்றுக்குள் சிறிய துகள்கள் மின்னிக்கொண்டிருப்பதைக் கவனித்துள்ளார். சந்தேகமடைந்த அவர், அந்தத் துகள்களை நெருப்பில் இட்டுச் சோதனை செய்தபோது, அவை உண்மையான தங்கம் என்பது உறுதி செய்யப்பட்டது.
அந்த வாத்தின் வயிற்றிலிருந்து மொத்தம் 10 கிராம் தங்கம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் சர்வதேச மதிப்பு சுமார் 1,800 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ₹1.6 லட்சம்) ஆகும். லியு வளர்த்த வாத்துகள் அனைத்தும் திறந்தவெளியில் மேய்ந்து வளர்ந்தவை. அந்தப் பகுதியில் உள்ள ஒரு நதி முற்காலத்தில் தங்கச் சுரங்கத்திற்குப் புகழ்பெற்ற இடமாக இருந்துள்ளது. வாத்து உணவைத் தேடி நதிக்கரையோரம் மண்ணைத் தோண்டியபோது, மண்ணுடன் கலந்திருந்த தங்கத் துகள்களையும் சேர்த்து விழுங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது.
தங்கம் பொதுவாக ஜீரணிக்கப்படாமல் உடலுக்குள் தங்கிவிடும் என்பதால், அது வாத்தின் வயிற்றுப்பகுதியிலேயே தங்கியிருந்துள்ளது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, லியுவின் தந்தை இது தங்களுக்கு வரவிருக்கும் ஒரு நல்ல ஆண்டிற்கான அறிகுறி என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சீனாவில் இதுபோன்ற சம்பவங்கள் அரிதாகவே நடக்கும் என்றாலும், அந்தப் பகுதி மக்கள் இதனை ஒரு ஜாக்பாட் அதிர்ஷ்டமாகவே பார்க்கின்றனர்.
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…
அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…
உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…
தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின்…
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…
அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி…