ஐயோ கடவுளே… நேபாளத்தையே காலி பண்ணுன பனிப்பாறை வெள்ளம்… சிக்கிம் என்ன பண்ணப் போகுது தெரியுமா?… உலுக்கி எடுக்கும் இமயமலைப் பேரழிவின் பின்னணி…!!

By Swetha on புரட்டாதி 1, 2026

Spread the love

இமயமலையில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறை முறிவு காரணமாக வடக்கு நேபாளப் பகுதியில் உள்ள ஆறுகளில் பெருவெள்ளம் பாய்ந்தோடியது. இந்த இயற்கைப் பேரழிவால் அப்பகுதியில் இருந்த நான்கு ஊர்கள் முற்றிலும் சேதமடைந்தன. அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுடன் பொதுமக்களும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இரண்டாயிரத்திற்கும் அதிகமானோரைக் காணவில்லை என்பதால் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நேபாளத்தில் நிகழ்ந்துள்ள இந்தப் பெரும் விபத்து அப்பகுதி மாநிலங்களை எச்சரிக்கையடையச் செய்துள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவின் சிக்கிம் மாநில அரசு உடனடியாகப் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் சிறியதும் பெரியதுமாக மொத்தம் நானூறுக்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் உள்ள நிலையில், அவற்றில் மிக ஆபத்தானவை எனக் கண்டறியப்பட்ட 16 ஏரிகளில் நவீன சென்சார்களைப் பொருத்த அரசு திட்டமிட்டுள்ளது.

   

சிக்கிம் மாநிலத்தைப்போலவே சீனா, திபெத் மற்றும் நேபாள எல்லைகளுக்கு உட்பட்ட இமயமலைப் பகுதிகளிலும் உள்ள அபாயகரமான பனிப்பாறைகளில் விரைவில் சென்சார்கள் பொருத்தப்பட உள்ளன. இத்தகைய முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் எதிர்காலத்தில் பனிப்பாறை வெடிப்பு நிகழ்வுகளைத் துல்லியமாகக் கண்டறிந்து, உடனடி எச்சரிக்கை விடுக்கவும், அதன் மூலம் பெருமளவிலான உயிர் மற்றும் பொருள் சேதத்தைத் தவிர்க்கவும் பெரிதும் உதவிபுரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.