கோவையை உலுக்கிய சிறுமி கொலை வழக்கு.. சிக்கிய 2 கொடூரர்கள்.. நடந்தது என்ன?.. ஐ.ஜி கொடுத்த அதிரடி விளக்கம்..!!!

Spread the love

கோவை சிறுமி கொலை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி செய்தியாளர்களைச் சந்தித்து விவரங்களை வெளியிட்டார். மாலை 6 மணிக்கு குழந்தை காணவில்லை என்று 100 என்ற எண்ணிற்கு வந்த தகவலை அடுத்து, இரவு 10 மணிக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த கார்த்தி என்ற வாலிபர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றது கண்டறியப்பட்டது.

விசாரணையில், கார்த்தி சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து பதுங்கி இருந்த குற்றவாளியை போலீசார் மடக்கிப் பிடித்தபோது, அவன் தப்பியோட முயன்றதில் அவனது வலது கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே இந்த வழக்கின் குற்றவாளிகளான கார்த்தி மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த மோகன் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐஜி ரம்யா பாரதி உறுதியளித்துள்ளார். மேலும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்தது போலவே, இந்த வழக்கிற்கான குற்றப் பத்திரிகையும் மிக விரைவாகத் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Muthu Mani

Recent Posts

ஏய்… வழி விடுடா… நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்… வாள்களுடன் 4 பேர் ஒரே பைக்கில் வெறியாட்டம்… அலறிய மக்கள்… நடுங்கவைக்கும் CCTV வீடியோ… வாரங்கல்லில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

வாரங்கல் நகரில் இரவின் அமைதியைக் குலைக்கும் வகையில், மதுபோதையில் இருந்த நபர்கள் சிலர் எல்லைமீறிய ஆட்டத்திலும் அராஜகத்திலும் ஈடுபட்டு பொதுமக்களுக்கு…

1 minute ago

அய்யய்யோ… என்ன கொடுமை?… பெட்ரோல் பங்க்கில் திடீரென நகர்ந்த கார்… அலறித் துடித்த ஊழியர்கள்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்பி முடிந்தவுடன், பணத்தைச் செலுத்தியதும் அவசரத்தில் வாகனத்தை உடனே இயக்கும் வழக்கம் பல டிரைவர்களிடம் உள்ளது.…

11 minutes ago

அடப்பாவி… நீயெல்லாம் மனுஷனா?… நகைக் பேராசையால் மனைவியை… கழுத்து நெரித்துக் கொன்று… கணவன் ஆடிய பயங்கர நாடகம்… கர்நாடகாவை உலுக்கிய சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சிஞ்சோளியைச் சேர்ந்த 32 வயதான அர்ச்சனா என்ற பெண், குடும்பத் தகராறு காரணமாக அவரது…

31 minutes ago

திக் திக்… பெட்ரோல் பங்கிற்கு சீல் வைக்க சென்ற… இந்தியன் ஆயில் மேலாளர் கொடூரமாக அடித்துக் கொலை… குலை நடுங்கவைக்கும் சம்பவம்…!

இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் மேலாளர் மகேஷ் ஷெல்கே, மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக்…

46 minutes ago

“117 எம்.எல்.ஏ-க்கள் கணக்கு”…. மெஜாரிட்டிக்கு போட்ட பிளான்… கசிந்த தவெக மேலிட ரகசியம்…. கடைசி நேரத்தில் மாறிய ட்விஸ்ட்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து ஆளும்கட்சியான…

1 மணத்தியாலம் ago

தவெக ஆட்சிக்கு திடீர் ஆபத்து?சத்தமே இல்லாம தூக்க பிளான்…. திருமாவளவன் போட்ட போடு…. உளவுத்துறை அறிக்கையால் அதிர்ச்சியில் முதல்வர் விஜய்….!

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், அந்த ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் தீவிரமாக ரகசியத் திட்டம்…

1 மணத்தியாலம் ago