2026 சட்டமன்ற தேர்தல் களத்தை நோக்கி அரசியல் கட்சிகள் தங்களுடைய நகர்வுகளை முன்னெடுத்து வருகிறது. திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்திட வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமர எடப்பாடி பழனிச்சாமியின் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விசிக மார்க்சிஸ்ட் என மிகப் பெரிய பட்டாளமே உள்ளது. அதிமுகவில் பாமக, பாஜக, தாமக ஆகிய கட்சிகள் மட்டுமே இருக்கிறது.
இந்த சூழலில் தங்களுடைய கூட்டணியை மேலும் வலுப்படுத்தி கொண்டால் மட்டும் தான் சட்டமன்ற தேர்தலில் வெற்றி சாத்தியம் என்பதை பழனிசாமி நன்றாக அறிந்து கொண்டார் . இதனை அடுத்து தன்னுடைய சுற்றுப்பயணத்தின் போது ஸ்டாலின் அவர்களே பிரமாண்டமான கட்சி ஒன்று எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது . நினைத்து கூட பார்க்க முடியாத கட்சி என்று பேசி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இதனால் தமிழக அரசியலில் இன்னும் சூடு பிடித்தது. அதிமுக கூட்டணிக்கு உள்ளே போகும் பிரமாண்ட கட்சி யார் ? என்பதை தற்போது அனைவருடைய கேள்வியாகவும் உள்ளது. இந்த கேள்விக்கு நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் தான் அந்த கட்சி என்று பேசப்பட்டு வருகிறது. ஆனால் பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வரும் விஜய் பாஜக இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா? என்ற கேள்விதான் தற்போது எழுந்துள்ளது.
அதேசமயம் ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி என அமிதாஷா தொடர்ந்து பேசி வருவது பாஜக மீது அதிமுகவினார் மத்தியில் தொடர்ந்து அதிருப்தியை உண்டாக்கி வருகிறது. இதனால் பாஜகவை கழட்டிவிட்டு கூட்டணிக்கு விஜய்யை கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு பலரும் வலியுறுத்தி வருவதாகவும் பேசப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…