அதிர்ச்சி… நள்ளிரவில் நடந்த அதிரடி வேட்டை… காண்டாமிருக கொம்புகளுக்காகத் திட்டமிட்ட… கும்பலின் சதி முறியடிப்பு… அசாமில் அரங்கேறிய சம்பவம்…!

By Swetha on கார்த்திகை 10, 2026

Spread the love

அசாம் மாநிலம் ஜோர்ஹாட் மாவட்டத்தில் காண்டாமிருகங்களை வேட்டையாட முயன்றதாக சந்தேகிக்கப்படும் 4 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். ஜோர்ஹாட் வனப்பிரிவின் தியோக் துணைப்பிரிவுக்கு உட்பட்ட ஹாதிஷால் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறப்புத் தேடுதல் வேட்டையின் போது இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காசிரங்கா தேசியப் பூங்காவின் எல்லைப் பகுதிகளில் காண்டாமிருகங்களை வேட்டையாடுபவர்களைத் தடுப்பதற்காகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ‘ஆபரேஷன் ஃபால்கன்’ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. வனப்பகுதியில் வேட்டைக்காரர்கள் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த துல்லியமான உளவுத் தகவல்களின் அடிப்படையில், பர்லூயிட் பகுதியின் அடர்ந்த காடுகளுக்குள் புகுந்து வனத்துறையினர் தேடுதல் நடத்தி இவர்களைக் கைது செய்தனர்.

   

விசாரணையில், இந்த வேட்டை கும்பலைச் சேர்ந்தவர்கள் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காண்டாமிருகத்தை வேட்டையாட முயன்ற போது, இந்த நடவடிக்கையின் போது சந்தேக நபர் ஒருவர் காண்டாமிருகம் தாக்கியதில் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன