பல திரைப்படங்களில் காமெடி காட்சிகளில் நடித்த ரசிகர்களிடம் பிரபலமானவர் பயில்வான் ரங்கநாதன். 70களில் நடிக்க தொடங்கியவர் என்பது 90களில் பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார. குறிப்பாக கவுண்டமணியுடன் பல படங்களிலும் நடித்து சிரிக்க வைத்தார். ஆவாரம்பூ படத்தில் ஷர்மிளியின் கணவராக வருவார். இவர் ஒரு காமெடி நடிகர் மட்டும் இல்லை. பத்திரிக்கையாளரும் கூட. சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக பத்திரிகையில் வேலை செய்தவர். சினிமாவிற்கு வந்த பிறகும் பத்திரிகையில் வேலை செய்வதை நிறுத்தவில்லை.

#image_title
இப்போதும் பல youtube சேனல்களில் சர்ச்சையான விஷயங்கள் குறித்து பேசி வருகிறார். குறிப்பாக நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் குறித்து பேசி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். இதனால் பல எதிர்ப்புகளையும் இவர் சந்திப்பது. சினிமா விழாக்களில் நடிகர் இயக்குனர்களிடம் துணிச்சலாக சர்ச்சையான கேள்விகளை கேட்டு பரபரப்பு ஏற்படுத்துவார். இவர் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். எம்ஜிஆர் நடிகராக இருக்கும் போதிலிருந்தே செய்தியாளராக வேலை செய்து வருபவர்.

அண்ணா என்ற பத்திரிகையில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஒரு விழாவில் எம்ஜிஆர் எல்லாம் ஒரு தலைவரா? என்று தேங்காய் சீனிவாசன் பேசியிருக்கிறார். அங்கே சென்றிருந்த பயில்வான் நீ எப்படி எம்ஜிஆர் குறித்து இப்படி பேசலாம். என்று அவரிடம் சண்டை போட்டது மட்டுமல்லாமல் அவரின் சட்டையை பிடித்து இழுத்து அடிக்க போய்விட்டாராம். அதன் பிறகு தேங்காய் சீனிவாசன் எம்ஜிஆரை தொடர்பு கொண்டு தலைவரை நான் உங்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

ஆனால் ரங்கநாதன் என்னை அடிக்கவந்து அவமானப்படுத்தி விட்டான் என்று சொல்ல கோபமடைந்த எம்ஜிஆர் பயில்வானை தன்னுடைய ராமாபுரம் தோட்டத்திற்கு வரச் சொல்லி பயில்வான் சென்றதும் கோபத்தில் இருந்து எம்ஜிஆர் அவரின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டாராம். அதில் பயில்வான் மயங்கி விழுந்தார் . அதன் பிறகு அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி அமர வைத்துள்ளார். அதன்பின் விவரத்தை பயில்வான் சொன்னதும் சரி விடு நீ சாப்பிட்டு போ என்று சொல்லி அவரை சாப்பிட வைத்து கையில் ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தாராம் எம் ஜி ஆர்.
