பழங்களா? இல்லை மெதுவான விஷமா?… குழந்தைகளுக்குப் பழம் கொடுக்கும் முன் இதைப் படியுங்கள்… மும்பை வியாபாரி செய்த பகீர் காரியம்…!!!

By Rajeshwari on மாசி 26, 2026

Spread the love

மும்பையில் எலிகளிடமிருந்து பழங்களைப் பாதுகாக்க ஒரு வியாபாரி பசையைப் பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பசையில் 3% மஞ்சள் பாஸ்பரஸ் உள்ளது, இது மனித உடலுக்குள் சென்றால் உயிரைப் பறிக்கக்கூடிய ஒரு நச்சுத்தன்மையுள்ள வேதிப்பொருள். குறிப்பாக, குழந்தைகளின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களைப் பாதிக்கும் இந்த நச்சு, மிக விரைவாக உடலில் உறிஞ்சப்படக்கூடியது.

மேலும் அந்த வியாபாரி பிடிபட்டது ஒரு சிறிய எச்சரிக்கை மணி மட்டுமே லாபத்திற்காக இது போன்ற ஆபத்தான முறைகளை மற்ற விற்பனையாளர்களும் பின்பற்ற வாய்ப்புள்ளதால் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளின் வெளிப்புறத் தோற்றம் மிகப்பொலிவாக இருந்தாலும், அவற்றில் மறைந்திருக்கும் இது போன்ற கண்ணுக்குத் தெரியாத நச்சுகளை அகற்ற சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

   

“>

   

இந்நிலையில் சந்தையிலிருந்து வாங்கி வரும் பொருட்களை அப்படியே பயன்படுத்துவதைத் தவிர்த்து, உப்பு அல்லது வினிகர் கலந்த நீரில் குறைந்தது 15-20 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் ஓடும் தண்ணீரில் நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். முடிந்தவரை பழங்களின் தோலை நீக்கிவிட்டு உண்பது கூடுதல் பாதுகாப்பை அளிக்கும். உங்களின் ஆரோக்கியம் உங்கள் கைகளிலேயே உள்ளது, எனவே விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.