ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள மீன் சந்தையில் நடைபெற்ற புத்தாண்டு ஏலத்தில், ‘புளூஃபின் டூனா’ வகை மீன் ஒன்று கற்பனை செய்ய முடியாத விலைக்கு விற்பனையாகி உலகத்தையே அதிர வைத்துள்ளது. சுமார் 243 கிலோ எடை கொண்ட இந்த மீன், 29 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போயுள்ளது. ஜப்பானின் பிரபல உணவக நிறுவனத்தின் உரிமையாளர் கியோஷி கிமுரா, அதிக விலை கொடுத்து மீனை வாங்கியுள்ளார்.
இவ்வளவு அதிக விலை கொடுத்து இந்த மீனை வாங்குவதற்கு ஜப்பானியர்களின் நம்பிக்கையே முக்கியக் காரணமாகும். புத்தாண்டின் முதல் ஏலத்தில் பெரிய மீனை வாங்குவது தொழில் வளர்ச்சிக்கும், அதிர்ஷ்டத்திற்கும் நல்லது என்று அவர்கள் கருதுகின்றனர். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 29 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய இந்த மீனை அதிக லாபத்திற்கு விற்காமல், தனது வாடிக்கையாளர்கள் புத்தாண்டு கொண்டாடுவதற்காக வழக்கமான விலையிலேயே கியோஷி கிமுரா வழங்க உள்ளார். இதன் மூலம் தனது நிறுவனத்திற்கு உலகளாவிய விளம்பரமும், மக்களின் நன்மதிப்பும் கிடைக்கும் என அவர் நம்புகிறார்.
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு அதிகாரப் போட்டி, 2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரங்கேறி வருகிறது. தனிப்பெரும்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.…
மும்பையின் மலாடு மேற்கு பகுதியில் உள்ள ஒரு மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. சாலையில்…
தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான பலப்பரீட்சை தீவிரமடைந்துள்ள நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தவெக-விற்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்பதைத்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது,…
சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகிய…