விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். 7 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்தது. இப்போது எட்டாவது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமலஹாசன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

ரவீந்தர் சந்திரசேகர், சாட்சனா நமிதாஸ், தீபக், தர்ஷா குப்தா, சத்யா, கானா ஜெஃப்ரி, சுனிதா, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, அன்சிகா, தர்ஷிகா, அருண் பிரசாத், விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அர்ணவ் ஆகியோர் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர். இந்த சீசன் தொடங்கிய நாள் முதலே விறுவிறுப்பாக செல்கிறது. இன்று முதல் எலிமினேஷன் நடைபெற்றது.

முன்னதாக ரஞ்சித், ஜாக்குலின், ரவீந்தர் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் ரவீந்தர் எலிமினேட் செய்யப்பட்டார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த கையோடு ரவீந்தர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

#image_title
அதில் அவர் கூறியதாவது, ஏகப்பட்ட இன்ஸ்டாகிராம் மெசேஜஸ், கால்ஸ் வந்திருக்கு. நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உங்க எல்லாருக்குமே பெரிய தேங்க்ஸ். ஒரு அன்பின் மிகப்பெரிய வெளிப்பாட்ட இந்த ஒரு வாரம் நீங்க கொடுத்திருக்கீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு என வீடியோவில் பேசியுள்ளார்.
Udanukudan.,
Sudasuda…
Will really miss you #Fatman but aanalum Romba neram pesureengaPaarunga Thanks evlo neram solreenga
Anyways take care of health #BiggBossTamilSeason8 #BiggBoss8Tamil pic.twitter.com/Wh2NgQv3YP— CIMENA (@Cimena_ig) October 13, 2024
