தளபதி விஜய் அவர்கள் தற்போது வெங்கட் பிரபு அவர்கள் இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். படம் நீண்ட எதிர்பார்ப்பு இருப்பதால் மிக விறுவிறுப்பாக இயக்கப்பட்டு வருகிறது. வரும் மார்ச் மாத கடைசிக்குள் இப்ப படப்பிடிப்பு முழுமையாக முடிந்த ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
படத்தில் வில்லன் போல் தோற்றமளிக்கும் அப்பா ஒரு கதாபாத்திரமாகவும் ஹீரோ போல் இருக்கும் மகனாக ஒரு கதாபாத்திரமாகவும் டபுள் ஆப்ஷனில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஜய் ராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
நடித்துக் கொண்டிருக்கும் கோட் படமும் அடுத்த படமான 69 வது படமும் முடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக இறங்கப் போகிறேன் என்று தெரிவித்திருந்தார். அதனால் விஜய் நடிக்கும் இந்த இரண்டு படங்களுக்கு மாபெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது விஜயின் சில படங்கள் மாபெரும் எதிர்பார்ப்பில் வந்து ரசிகர் மத்தியில் சொதப்பியது போல் இப்படம் அமைந்து விடக்கூடாது என்பதற்காக வெங்கட் பிரபு இப்படத்தை பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார் VFX, CG மூலமாக விஜய் அவர்களை சிறப்பாக உருவாக்கி வருகிறேன் என்று வெங்கட் பிரபு தற்போது தெரிவித்திருந்த.
இயக்குனர் அவர்கள் தற்போது சில தினங்களுக்கு முன்னால் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று தகவல் தெரிவித்து இருந்தார். அந்த நிலையில் முதல் சிங்கிள் காண அப்டேட் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் அமைந்துள்ள இப்படத்தில், யுவன் இசை அமைப்பில் முதல் சிங்கிள் பாடலை வெளியிட போவதாக தகவல் கசிந்துள்ளது. அந்த முதல் பாடலை விஜய் அவர்களே பாடியுள்ளார் என்றும், அதில் மிகச் பிரமிக்கக்கூடிய சர்ப்ரைஸ் என்னவென்றால்.! விஜயுடன் அப்பாடலில் இசைஞானி இளையராஜா அவர்களும் இணைந்து பாடியுள்ளார்களாம்.
இதுவரை சேராத புது காம்போவாக இருக்கிறது, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இசைஞானியும் தளபதி அவர்களும் இணைந்து கொடுக்கும் போகும் பாடல் எப்படி இருக்கும் என்று வார்த்தைகளால் சொல்ல முடியாது! வெளியான பிறகு ரசிகர் மத்தியில் மாபெரும் அதிர்வையை உண்டாக்கும் என்று இதிலிருந்து தெரிகிறது.
View this post on Instagram