SS ராஜேந்திரன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பழம்பெறும் மூத்த நடிகர், இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவரது இயற்பெயர் சேடப்பட்டி சூரியநாராயண ராஜேந்திரன் என்பதாகும். இவரை SSR என்றும் மக்கள் அழைத்தனர். ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த SS ராஜேந்திரன் ஸ்ரீ ஆண்டாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் நெகட்டிவ் ரோல்களில் நடித்து வந்தார் SS ராஜேந்திரன்.

#image_title
வில்லன் கதாபாத்திரத்தில் இருந்து நடிகராக நடிக்க ஆரம்பித்தார் SS ராஜேந்திரன். ராஜா ராணி தெய்வப்பிறவி ஆலயமணி பச்சை விளக்கு பூம்புகார் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் SS ராஜேந்திரன். எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் ஆகியோருக்கு இணையாக போற்றப்பட்டவர் SS ராஜேந்திரன். தனது அபாரமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்து தனக்கென தனி ரசிகர்களை கொண்டிருந்தவர் SS ராஜேந்திரன்.

#image_title
நடிக்கும் போதே எம்ஜிஆர் போல மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று அரசியலில் பணியாற்றினார் SS ராஜேந்திரன். தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் சிவாஜி கணேசனுக்கு பிறகு அசைக்க முடியாத நடிகர்களில் ஒருவராக எஸ்எஸ்ஆர் திகழ்ந்து வந்தார். அழகு தமிழ் உச்சரிப்பால் ரசிகர்களை ஆட்கொண்ட இவர் பகுத்தறிவு சிந்தனைகளுக்கு எதிரான புராண படங்களில் நடிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்ததன் மூலம் லட்சிய நடிகராக அறியப்பட்டார்.

திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்து அப்போதைய பிரதமர் நேருவுக்கு கருப்பு கொடி காட்டியது, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டது என தனது அரசியல் நடவடிக்கைகளை துவங்கினார். 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவிலேயே சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றார்.
