கம்போடியாவில் ஒரு மர்மமான பல்லி அதன் வாலில் இருந்து நெருப்பை வெளியிடுவது கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ @scaryencounter என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து பகிரப்பட்டுள்ளது, இது இரண்டு நாட்களில் 3.5 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டுள்ளது. கம்போடியாவைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் சுற்றித் திரியும் பல்லியை கேமராவில் படம் பிடித்துள்ளார்.
View this post on Instagram
அந்த வீடியோவில் ஒரு பல்லி சுவரில் ஊர்ந்து செல்வதைக் காணலாம். அது அதன் வாலை நகர்த்தியவுடன், திடீரென அதன் நுனியிலிருந்து மின்சாரம் போல நெருப்பு வெளியேறுகிறது. இந்த அரிய மற்றும் மர்மமான காட்சியைக் கண்டு நெட்டிசன்கள் திகைத்துப் போயுள்ளனர். இணையவாசிகள் பலரும் இந்த பல்லியை பிரபலமான போகிமான் ‘சார்மண்டர்’ உடன் ஒப்பிடுகின்றனர் அதன் வாலும் இதே போன்ற அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்தப் பல்லியின் பின்னணியில் உள்ள அறிவியல் என்னவென்று தெரியவில்லை.
