சொன்னதை செய்யாமல் இஷ்டத்துக்கு போய்க்கொண்டிருக்கும் ‘அமரன்’.. இடிதாங்கியாக ஆண்டவர்..

By Ranjith Kumar

Published on:

கமல்ஹாசன் நிர்வாண ராஜ்கமல் கிளிமில் தயாராகி வரும் படம் தான் “அமரன்”. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னால் படத்தின் பர்ஸ்ட் லுக், டைட்டில் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று மக்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை அள்ளிக் குவித்தது.

இந்தப் படம் ராணுவ களத்தில் நடக்கும் போர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. மறைந்த மேஜர் முகுந்தன் அவர்கள் ராணுவ களத்தில் நம் தாய் நாட்டிற்காக போர் புரிந்து உயிரை விட்ட இவரின் வாழ்க்கை சரிதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிவகார்த்திகேயன் மிகக் கடுமையான ஆர்மி பயிற்சி அளிக்கப்பட்டு தன் உடலை வருத்திக்கொண்டு ட்ரைனிங் செய்து வருகிறார். அதற்கான புகைப்படம் கூட தற்போது வெளியாகி இணையத்தில் மிக வைரலாகி கொண்டிருந்தது.

   

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து post ப்ரோடக்ஷன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இப்படம் வெளியாகுவதற்குள் OTT நெட்பிக்ஸ் நிறுவனம் இப்படத்தை 60 கோடி ரூபாய் கொடுத்து உரிமத்தை பெற்றுள்ளது. தற்போது விறுவிறுப்பாக நடந்து முடிந்த படத்திற்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது இதற்கு முன்னால் பிக் செய்த பட்ஜெட்டை தாண்டி 30 கோடி செலவாகி உள்ளதாம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து போஸ்ட் ப்ரொடக்சன் நடக்க ஆரம்பித்தபின், சிவகார்த்திகேயன் அவர்கள் ஏ.ஆர் முருகதாஸ் அவர்களின் படத்தில் நடிக்க சென்று விட்டார்.

ஆனால் தற்போது மீண்டும் இப்படத்தில் கிட்டத்தட்ட 20 நாட்கள் படபிடிப்பு நடத்த வேண்டும் என்று சிவகார்த்திகேயன் இடம் கேட்டு உள்ளார்களாம், முருகதாஸ் அவர் படத்தில் பிசியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் எப்படி படத்திற்கு டேட் கொடுக்க முடியும் என்று விழி பிதுங்கி நிற்கின்றாராம். அதுமட்டுமில்லாமல் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள இப்படம் மீண்டும் துவங்கப்பட்டால் படம் எப்போது வெளியாகும் என்று சந்தேகத்தை கிளப்புகிறது.? ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினமன்று இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Ranjith Kumar