மஃப்டியில் இருந்த பெண் போலீஸ்… மெரினா கடற்கரையில் வடமாநில வாலிபர்கள் செய்த காரியம்… அடுத்து நடந்த பரபரப்பு.!!!

By Srimathi on புரட்டாதி 3, 2025

Spread the love

காவல்துறையில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர், தனது தோழியுடன் சீருடை அணியாமல் சாதாரண ஆடையில், நேற்று முன்தினம் மெரினாவிற்கு சென்று உள்ளார். அவரை பெண் போலீஸ் என்று அறியாமல், அங்கு வந்த 2 வாலிபர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். உடனே அவர்கள் இருவரையும் மடக்கி பிடிக்க, பெண் போலீஸ் முயற்சித்தார், அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்ட நிலையில், மற்றொரு நபரை அண்ணா சதுக்கம் போலீசில் ஒப்படைத்தார்.பிடிபட்ட வாலிபரின் பெயர் சுக்லா (33). இவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், கொடுங்கையூரில் தங்கி வேலை செய்து வருகிறார் என்றும் தெரியவந்தது. மேலும் இவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.